வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தலைமையில் நாளை பேரணி.!

டெல்லி : வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில், நாளை (ஆகஸ்ட் 11)

Rahulgandhi

டெல்லி :வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில், நாளை (ஆகஸ்ட் 11) புதுடெல்லியில் பேரணி நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் இந்தப் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பேரணி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி செல்லும். இந்தப் பேரணி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து, வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் பெங்களூரு மத்திய தொகுதியில், குறிப்பாக மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.