தெரு நாய்களை பிடிக்க 8 வாரங்கள் கெடு.., உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி.!

இது மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையிலான கொள்கைகளுக்கு பின்னடைவு என ராகுல் காந்தி விமர்சித்துள்ளா

Rahul Gandhi - Stray Dogs

டெல்லி :டெல்லி-என்சிஆர் தெருக்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான சர்ச்சை அதிகரித்து வருகிறது.காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தெருநாய்களின் பிரச்சினை குறித்து கவலை தெரிவித்து, அவற்றை காப்பகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஊமை உயிரினங்கள் ஒழிக்கப்படக்கூடிய ‘பிரச்சனை’ அல்ல, அவ்வாறு செய்வது கொடுமை என்று ராகுல் காந்தி கூறினார்.

டெல்லி-என்.சி.ஆரில் இருந்து அனைத்து நாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பல தசாப்த கால மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையிலான கொள்கையிலிருந்து பின்வாங்குவதாக ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், ”டெல்லியில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு, மனிதாபிமான, அறிவியல் சார்ந்த கொள்கைகளுக்கு பின்னடைவு. அவைகளை அகற்றும் முடிவு கொடூரமானது. காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை மூலம் பொது பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் ஒருசேர உறுதி செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node