நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் ராகுல் நடந்து கொண்டதற்கு வெட்கப்பட வேண்டும்...!மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் ராகுல் நடந்து கொண்டதற்கு வெட்கப்பட வேண்டும் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் ராகுல் நடந்து கொண்டதற்கு வெட்கப்பட வேண்டும் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறுகையில், நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் ராகுல் நடந்து கொண்டதற்கு வெட்கப்பட வேண்டும். HAL நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்படவில்லை என ராகுல் கூறியது தவறு. HAL நிறுவனத்திற்கு ரூ.26,570கோடி மதிப்பிலான பாதுகாப்புத்துறை பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும் HAL நிறுவனத்திற்கு ரூ.73,000கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளன என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.