பாஜகவின் பணத்திற்கும் எங்களிடம் இருக்கும் உண்மைக்கும் தான் போட்டி! ராகுல்காந்தி பேச்சு!

தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களவை போட்டியில்

தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களவை போட்டியில் இருக்கும் பாஜகவும் காங்கிரசும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க தவறவில்லை.

அந்த வகையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ பிரதமரின் குடும்பத்தை நான் மதிக்கிறேன், எனது குடும்பத்தை அவர் விமர்சித்ததை பற்றி நான் கவலைப்படப்போவதில்லை

கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று அவர் கூறியதை நாங்கள் தவறு என்று வெளிப்படுத்தினோம். மக்களின் முடிவே எங்களின் முடிவு. பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்களிடம் இருக்கும் உண்மைக்கும் தான் போட்டி’ என கூறினார்.

DINASUVADU