மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்து விட்டனர் என கூறிய ஸ்மிரிதி இரானி

This news gives information about Smriti Irani said that he has chosen Modi again

இந்தியா முழுவதும்  நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. அதில் 2 கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது.

மீதம் உள்ள 5 கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.இந்த தொகுதிக்கு மே 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு ஸ்மிரிதி இரானி வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , இந்தியா, இத்தாலி மட்டும் உலகில் எந்த பகுதியில் இருந்தும் உங்கள் உறவினர்களை அழைத்து வந்தாலும் . இந்திய மக்கள் நியாயம் வழங்குவார்கள். மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்து விட்டனர் என கூறியுள்ளார்.