பெண்களை தாக்கிய வழக்கில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் விடுவிப்பு...!!

In 2009, 30 people, including Shriram Sena leader Pramod Muthalik, were freed in Mangarmar in the Amarniya Pub (Amnesia Pub) This attack, which was supposed to prevent drinking culturally degenerating women, was at that time controversial. In the case, the case was filed against 30 persons including Sriram Sena leader Pramod Muthalik. In this case, the trial court has dismissed 25 people claiming there was no evidence of the attack. Two of the remaining 5 people have already died. 3 people have gone abroad and their investigation is on. Promoth Muthalik said that after the verdict it was a victory for the truth,

கர்நாடக மாநிலம் மங்களூரில்,கடந்த 2009ஆம் ஆண்டில் அம்னீஷியா பப் ((Amnesia Pub)) என்னும் மதுபான விடுதியில் பெண்களை தாக்கிய வழக்கில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் விடுவிக்கப்பட்டனர்.

பெண்கள் மதுஅருந்தும் கலாச்சார சீரழிவை தடுப்பதாகக் கூறிக்கொண்டு நடைபெற்ற இந்த தாக்குதல் அப்போது இந்நிகழ்வு அங்கு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த விவகாரத்தில் கர்நாடக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி அவர்கள் 25 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள 5 பேரில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.3 பேர் வெளிநாடு சென்றுவிட்டதால் அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

புரமோத் முத்தலிக், தீர்ப்பு வெளியான பிறகு அது உண்மைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்,