தொலைக்காட்சி விவாதங்கள் தான் அதிக மாசு ஏற்படுத்துகிறது – உச்சநீதிமன்ற நீதிபதி!

Supreme Court Judge Ramana has said that televised debates are the most polluting.

தொலைக்காட்சி விவாதங்கள் தான் அதிக மாசு ஏற்படுத்துகிறது என  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தற்போது அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற கூடிய புகையினாலும் தான் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அவர்கள், தீபாவளி பட்டாசு வெடித்ததற்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து பேசியுள்ளார்.

மேலும் டெல்லியில் உள்ள காற்று மாசை விட தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் தான் மாசுபாடு அதிகம் உள்ளதாகவும், நீதிமன்றத்தில் பேசப்படும் சிறு சிறு பேச்சு வார்த்தைகள் கூட சர்ச்சைக்குரிய பிரச்சனைகளாக தொலைக்காட்சிகளில் மாற்றப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.