ஹோலி பண்டிகையில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கு துப்பாக்கிச் சூடு

பா.ஜ.க எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா மீது துப்பாக்கியால் சுட்டனர். அப்போது யோகேஷ் வர்மா காலில் குண்டு பாய்ந்தது. சம்பவம் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ யோகேஷ் வர்மா எந்த

பா.ஜ.க எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா மீது துப்பாக்கியால் சுட்டனர். அப்போது யோகேஷ் வர்மா காலில் குண்டு பாய்ந்தது.

சம்பவம் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ யோகேஷ் வர்மா எந்த விதமான வாக்குமூலமும் தரவில்லை என கூறப்படுகிறது.

நேற்று முதல் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது.இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம்  லக்கிம்பூர் கேரியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் உள்ள உறுப்பினர்கள் ,  தலைவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வந்தனர்.

அப்போது பா.ஜ.க எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா மீது துப்பாக்கியால் சுட்டனர். அப்போது யோகேஷ் வர்மா காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக  அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் யோகேஷ் வர்மா-விற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும்  சில தினங்களில் வீடு திரும்பி விடுவார் என டாக்டர்கள் கூறினார்கள்.  இந்த சம்பவம்  குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கியால்  சுட்டவர் யார் என இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ யோகேஷ் வர்மா எந்த விதமான வாக்குமூலமும் தரவில்லை என கூறப்படுகிறது.