10ஆம் வகுப்பு படித்திருந்தால் ரயில்வேயில் அப்ரண்டிஸ் டிரெய்னி வேலை ஐஆர்சிடிசி யில் 2022 க்கான அறிவிப்பு வெளிவந்தது.
ஐஆர்சிடிசி(IRCTC), தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு துறைகளில் 80 அப்ரண்டிஸ் டிரெய்னி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீங்கள் ஐடிஐ சான்றிதழுடன் மெட்ரிகுலேஷன் (10வது) தேர்ச்சி பெற்றவர்கள் என்றால், ஐஆர்சிடிசி அப்ரண்டிஸ் டிரெய்னி வேலைகள் 2022ன் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) 80 பயிற்சியாளர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்ரண்டிஸ்ஷிப் சட்டம் 1061 இன் கீழ், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA) இல் 80 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பதவிகளுக்கு அக்டோபர் 25, 2022 முன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்-25,2022
பதவி விவரம்: அப்ரண்டிஸ் டிரெய்னி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA)
தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெட்ரிகுலேஷன்(10 ஆவது) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் COPA வர்த்தகத்தில் NCVT/SCVT உடன் இணைக்கப்பட்ட ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இது குறித்து அதிகாரபூர்வ இணைய தளத்துக்கு சென்று அறிவிப்பை படித்து பார்த்து விட்டு விண்ணப்பிக்கவும், அதிகாரபூர்வ இணையதளமான IRCTC –https://www.irctc.com/க்கு சென்று “Engagement of apprentices in IRCTC North Zone, New Delhi” என்ற லிங்க்கை தொடர்ந்து அறிவிப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கு மேலே குறிப்பிட்டது போல அதிகாரபூர்வ இணையதளமானhttps://www.irctc.com/க்கு சென்று அக்-25க்கு முன்னதாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.