மகிழ்ச்சியான செய்தி : இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு...! 3 ஆயிரத்திற்கு கீழ் சென்ற கொரோனா உயிரிழப்பு...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,726 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,726 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,70,881 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 9,950 ஆயிரம் குறைவாக உள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,95,70,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 2,726ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,77,031 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,13,378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 25,90,44,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.