சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்...!

சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி  கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை

சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி  கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

unknown node

இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதேபோல்  சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நவம்பர் 13 ஆம் தேதி விசாரணை செய்கிறது  உச்சநீதிமன்றம்.இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.