விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடு...!!

The physicist of the UK, Stephen Hawking, died on July 14th due to ill health. Special postage stamps were issued by the post of Indian postal department Stephen Hawking, while the various parties paid tribute. The Chief Post Officer of Maharashtra and Goa region, General H.C. Dr. Sandeep Trivedi, head of Agarwal and Tata Institute Research Institute, Agrawal said that India Post Department paid homage to the great scientist by releasing this post in 22 cities simultaneously

இங்கிலாந்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 14ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், இந்திய தபால் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.

பின்னர் மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரத்தின் தலைமை தபால் அதிகாரி ஜெனரல் எச்.சி. அகர்வால் மற்றும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி கூடத்தின் தலைவரான டாக்டர் சண்டீப் திரிவேதி ஆகியோர் கூட்டாக இணைந்து தபால் தலையை வெளியிட்டனர். மேலும் இந்த தபால் தலையை 22 நகரங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டதன் மூலம் பெரும் விஞ்ஞானிக்கு இந்திய அஞ்சல் துறை அஞ்சலி செலுத்தியதாக அகர்வால் தெரிவித்தார்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடு...!!