அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம்
சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி
சபரிமலைக்கு சென்ற இரு பெண்கள்
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி மனு
பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம்:
unknown nodeஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த முயன்ற போது அதை தடுக்கும் விதமாக கலவரத்தை செய்யும் முயற்சியில் எடுபடது RSS போன்ற சங்பரிவார அமைப்புகள்.RSS இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி:
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்து திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சியில் கேரளாவில் பல்வேறு அமைப்புகளை பயன் படுத்தியது கேரள பிஜேபி.
சபரிமலைக்கு சென்ற இரு பெண்கள்:
உச்சநீதிமந்திரத்தை தீர்ப்பை அமுல்படுத்த கேரள அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்ட சூழலில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க பிந்து , கனகதூர்கா கருப்பு உடையணிந்து , முகத்தை மூடிக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டனர்.
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி மனு:
unknown nodeஇந்நிலையில் சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேளர அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:
அதேசமயம் கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.