திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு...!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் வைப்பது என்பது அவசியம் இல்லை என்றும், இதனால் கஜா புயல் மறு சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிட்டார். வழக்கு விவரங்கள் முழுமையாக தெரியாமல் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.