தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு, தற்கொலை செய்து கொண்ட பெண்!
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பெண் ஒருவர் தனது மாமியாருடன் போனில் பேசும் பொழுது ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் போனில் பேசிக் கொண்டிருந்தபோதே பிரச்சினை ஏற்பட்டதால், அவர் தனது 10 வயது மற்றும் நான்கு வயது கொண்ட குழந்தைகள் இருவரையும் அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளார்.
அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கிணற்றில் விழுந்த 10 வயது குழந்தை உயிரிழந்த நிலையில், 4 வயது குழந்தை கற்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளது. தற்பொழுது இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது