குஜராத்தில் மும்முனை போட்டி! முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுவரை பாஜக , காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவி வந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கியதால் மும்முனை போட்டியாக மாறியுள்ளது.

மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் உள்ள 89 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியுள்ளது. இன்று மாலை 5 மணி வரை நடைபெற உள்ள வாக்குபதிவில் சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். முதற்கட்ட தேர்தலில் 70 பெண்கள் உட்பட 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.