கார் மீது மோதிய லாரி – ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!

Ten members of the same family were tragically killed when a lorry collided with a car in Gujarat this morning.

குஜராத்தில் இன்று அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி ஒன்று திடீரென அந்த கார் மீது மோதி உள்ளது. இதனை அடுத்து காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சூரத்திலிருந்து பாவ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், இந்திரனாஜ் கிராமம் அருகே சென்றபோது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஏழு ஆண்கள் ஒரு குழந்தை ஆகியோர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தாராப்பூர் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.