வெயிலை சமாளிக்க முடியல.. திருட சென்ற இடத்தில் ஏசியில் தூங்கிய திருடன்.!

உத்தரப்பிரதேச மாநிலம் : லக்னோ இந்திரா நகரைச் சேர்ந்த டாக்டர் சுனில் பாண்டே என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நபர் ஒருவர் திருடுவதற்காக

உத்தரப்பிரதேச மாநிலம் :லக்னோ இந்திரா நகரைச் சேர்ந்த டாக்டர் சுனில் பாண்டே என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நபர் ஒருவர் திருடுவதற்காக வீட்டிற்குள் சென்று வெப்பம் தாங்காமால் அங்கு இருந்த ரூமில் ஏசியை போட்டுகொண்டு சுகமாக தூங்கினார். வீடு திறந்து கிடைத்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர்  உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று அசந்து தூங்கி கொண்டு இருந்த அந்த திருடனை புகைப்படம் எடுத்தார். புகைப்படம் எடுத்தபிறகு அவரை எழுப்பி கைது செய்து அழைத்துச்சென்றார்கள்.