வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி அறிமுகம் செய்யப்படுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாக்கியராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞ்சர் யாருக்கு வாக்களித்தோம் என்று அறியும் வசதி வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.