உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்று 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய கொடூரன் – 2 வயது குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

The body of a 2-year-old boy has been found in the canal after a man from Uttar Pradesh was arrested for shooting his wife and throwing 3 children into a canal after his wife refused to have sex.

மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கால்வாயில் இருந்து 2 வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா எனும் குழந்தையும் உள்ளனர். கடந்த 15 நாட்களாக குமாரின் மனைவி உடல்ரீதியாக உறவு கொள்வதற்கு பப்பு குமாரிடம் இணங்கி செல்லாமல் இருந்ததால், கோபம் அடைந்த குமார் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார்.

மேலும், தனது மூன்று குழந்தைகளையும் தூக்கி கால்வாயில் வீசி எறிந்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்ததில் தனது மனைவியை கொன்றதையும் தனது குழந்தைகளை கால்வாயில் வீசியதையும் ஒப்புக் கொண்டிருந்தார்.  எனவே அவர் குழந்தைகளை வீசியதாக கூறப்பட்ட கால்வாயில் சடலங்கள் உள்ளதா என காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்பொழுது 2 வயதுடைய குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.