வேளாண் சட்டங்களை எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மூன்று வேளாண் மசோதா சட்டங்கள் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள், எதிர் கட்சியினர் ஆகியோர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தோழமை கட்சிகள் வேளாண் திட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், இன்றைய போராட்டத்தின் மூலமாக தமிழ்நாடு விவசாயிகள் பக்கம் இருக்கும் என நாங்கள் காட்டி இருக்கிறோம், தொடர்ந்து போராடுவோம். அதுபோல அதிமுக அரசின் துரோகங்கள் இதுவரை நடந்தது போதும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசும் எங்களுடன் இணைந்து எதிர்க்க விட்டால் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node