கொரோனாவை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழாக்கம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மக்களும்

தமிழாக்கம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மக்களும் அலட்சியமாக தான் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘முகக்கவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அது நல்ல கேள்வி. அருமையான யோசனை. கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டப்பட வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணியும்படி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பிரதமரும், முதல்வரும் கூறுகின்றனர். விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியாகின்றன. நானும் அறிவுறுத்தி வருகிறேன். இவ்வளவுக்கு பிறகும் திருந்தாமல் செயல்படுவது குற்றம் அல்லவா?

சென்னையில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. 90% மக்கள் முக்கவசம் அணிவதில்லை என்று ஆணையரே கூறுகிறார். அதன்பிறகும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்? விதிகளை மதிக்காமல் கொரோனாவை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது.’ என பதிவிட்டுள்ளார்.