செய்திகள்

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும்  இஸ்பகான் ஆகிய மூன்று […]

#Iran 7 Min Read
US destroys 3 Iranian nuclear

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு பொது நல மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ் குமார், இந்த உத்தரவை பிறப்பித்தார். பொது மக்கள் பயன்படுத்துவதால் கழிப்பறைகளின் பராமரிப்பு பாதிக்கப்படுவதாகவும், இது பெட்ரோல் நிலையங்களுக்கு நிதிச்சுமையாக உள்ளதாகவும் எரிபொருள் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. […]

#Petrol 5 Min Read
Petrol station toilets

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்று கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். லக்னோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘ஸ்த்ரீ சம்மான் சம்ருத்தி யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், எளிய மக்களுக்கு உயர்தர மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் […]

#AkhileshYadav 5 Min Read
Akhilesh Yadav

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் – ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல போரில் இன்று அமெரிக்காவும் நேரடியாக இறங்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய அணு உலைத் தளங்களை அமெரிக்கா தாக்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும், இதை “பெரிய இராணுவ வெற்றி” என்றும் கூறினார். […]

#Iran 5 Min Read
abbas araghchi

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின் மொழிக் கொள்கையை விமர்சித்து, “ஆங்கிலத்தை விட்டுவிட்டு ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வி, ஹிந்தி திணிப்புக்கு எதிரான அவரது நிலைப்பாட்டையும், ஆங்கிலத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தையும், தாய்மொழிகளின் அவசியத்தையும் வெளிப்படுத்தியது. மதுரை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த சீமான் ” மதுரையில் நடைபெறும் முருகன் மாநாடு, தமிழர் […]

#NTK 6 Min Read
seeman

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த தாக்குதல்களுக்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரானின் அரசு ஊடகமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக […]

#Iran 6 Min Read
israel benjamin netanyahu

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். த.வெ.க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொது நலப் பணிகள் மற்றும் கொண்டாட்டங்களை மேற்கொண்டு, இந்த நாளை சிறப்பித்தனர். விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய அரசியல் தலைவர்கள் பற்றி பார்ப்போம்.  பாஜக தமிழக […]

happy birthday vijay 12 Min Read
vijay birthday

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…ஏமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம்,” என்று அறிவித்துள்ளது. ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமன் தனது கடல் எல்லைப் பகுதியான சிவப்புக் கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. […]

#Iran 5 Min Read
israel iran war yemen

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியுள்ளன. அமெரிக்க செனட் சபையின் முன்னாள் பெரும்பான்மைத் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமான சக் ஷூமர், “அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஈரானை தாக்கியதற்கு டொனால்ட் டிரம்ப் பதில் அளிக்க வேண்டும்,” என்று கடுமையாக விமர்சித்தார். இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல்-ஈரான் மோதலின்10-வது நாளில், அமெரிக்கா முதல் முறையாக நேரடியாக களமிறங்கியதைக் குறிக்கின்றன, […]

#Iran 4 Min Read
donald trump US

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை நேரடியாக போரில் இறங்காமல் இருந்த அமெரிக்கா இன்று திடீரென நேரடியாகவே போரில் இறங்கியது. இன்று ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என்று […]

#Iran 6 Min Read
Ali Khamenei trump

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி போரில் நேரடியாக இறங்கியுள்ளது. ஜூன் 22-ஆம் தேதி ஈரானின் முக்கிய அணு உலைத் தளங்களான ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீது அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிப்பதற்காக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதைக் குறிக்கிறது. அமெரிக்க அதிபர் […]

#Iran 7 Min Read
israel iran war us

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13, 2025 முதல் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதலில், ஈரானில் 224 பேர் உயிரிழந்ததாகவும், இஸ்ரேலில் 24 […]

#Iran 7 Min Read
israel iran war Abbas Araghchi

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் எட்டு ஆண்டுகளாக உறுதியாக இருந்து வரும் மதிமுக, கட்சியின் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்த, 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆசைப்படுவதாக அவர் கூறினார். இந்தப் பேட்டி, திருச்சி […]

#DMK 5 Min Read
mk stalin durai vaiko

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்தில், பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பயங்கர விபத்தில் 241 பயணிகள் உட்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை பணியகம் (AAIB) தலைமையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), பிரிட்டன் மற்றும் போயிங் நிறுவன […]

#AIRINDIA 5 Min Read
ahmedabad plane crash

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 21 முதல் 22 -ஆம் தேதி வரை  தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல, ஜூன் 23-ஆம் தேதி முதல் ஜூன் 27 வரை தமிழகத்தில் ஒரிரு […]

#IMD 4 Min Read
tn rain

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆளுநர் விருட்சசனம், புஜங்காசனம் மற்றும் தனுரசசனம் உள்ளிட்ட யோகா ஆசனங்களைச் செய்தார். அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காக்கா தோப்பு பகுதியில் உள்ள அதி நர்சிங் கல்லூரியில் நடந்த சிறப்பு யோகா பயிற்சியில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா பங்கேற்றார். மேலும், அவருடன் […]

#BJP 4 Min Read
Spiderman- Superman - Namitha

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 19ம் தேதி புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று […]

#AmitShah 6 Min Read
Anbil mahesh - Amit Shah

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் கோம் மாகாண போலீசார் இன்று தகவல் தெரிவித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, சியோனிச ஆட்சியின் உளவு சேவைகளுடன் தொடர்புடையவர்கள், பொதுமக்களின் கருத்தை தொந்தரவு செய்தவர்கள் மற்றும் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இஸ்ரேலுக்காக […]

#Iran 3 Min Read
Iran arrests spying for Israel

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்குப் பிறகு, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அறிவித்தது. அன்றாட வாழ்வில் யோகாவை சேர்ப்பதால் மனம் மற்றும் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை இந்தியா […]

#Annamalai 5 Min Read
Yoga Day - Annamalai

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது.ஒரு பக்கம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை குறித்து விமர்சனம் செய்து பேசி வருவது போலவும் மற்றோரு பக்கம் திமுகவை சேர்ந்தவர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், திமுக ஆட்சியில் மக்கள் துயரமாக இருக்கிறார்கள் என்பது போல சமீபத்தில் விமர்சித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சு குறித்து இன்று […]

#ADMK 5 Min Read
edappadi palanisamy sekar babu