புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு மக்களுக்கு உங்கள் சந்திர பிரியங்காவின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்… என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்… தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். 36 இஸ்லாமிய கைதிகள் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாக பேரவையில் இபிஎஸ் பேசினார். இந்த தீர்மானத்திற்கு ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் ஆகிய எம்எல்ஏக்கள் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் 39 இஸ்லாமியர்கள் விடுதலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. […]
தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றபட்டது. இன்றைய கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி தொடர்பான கோரிக்கைகள், பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர் . அதற்கு உரிய அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் பெண்கள் விடுதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார். அதிமுக எம்எல்ஏ மரகதம் […]
அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை பரிசளித்து இருந்தார். இந்த கவசமானது மதுரை அண்ணா நகர் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும். ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தியின் போது அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்து பசும்பொன்னார் சிலைக்கு அணிவித்து பின்னர் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும். அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்த காலத்தில் […]
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து 4வது நாளாக நடந்து வரும் போருக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்த போரைத் நாங்கள் தொடங்கவில்லை என்றும் ஆனால் முடித்துவைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இன்றுடன் உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 தாண்டியது. இந்நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது பதிவில், “இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை, இது மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் எங்கள் மீது திணிக்கப்பட்டது. ஆனால், […]
1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு 20 – 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் ஆகிய எம்எல்ஏக்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த தீர்மானத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், […]
கடந்த 5 நாட்களாக நீடித்த சோதனைக்கு பிறகு திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூரில் ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, ஹோட்டல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வரை 5 நாட்களாக சோதனை நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், அவரது […]
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், எம்ஆர்பி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று […]
நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஈபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இம்முறை தேர்தலில் மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. கூட்டணி முறிவிற்கு பிறகு இரு கட்சிகளும் மவுனமாக இருந்ததால், கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் என்றும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனவும் அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது. வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுவோம் என […]
கடந்த 7ம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெறும் உச்சக்கட்ட போரில், கடந்த மூன்றே நாட்களில் இரு தரப்பிலிருந்தும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் எச்சரிக்கை கொடுக்காமல், குண்டுகளை வீசினால் நாங்கள் வசப்படுத்தி வைத்திருக்கும் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. காசா பகுதிகளை கைவசப்படுத்த முயற்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்களின் வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டும், வீடியோக்களும் […]
நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி எண் 110-ன் […]
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளார். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு […]
தொடர்ந்து 4வது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் பலியானோர் எண்ணிக்கை 1,600 தாண்டியுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உலக நாடுகள் விரும்பும் நிலையில், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம், காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் ராணுவ படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார். “அப்பாவி இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய […]
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில், 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பிற நாடுகளின் ராணுவ உதவிகள் எங்களுக்கு தேவையில்லை என்றும், இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் […]
நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் […]
கடந்த மாதம் 19-ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதைக் கண்டித்து, திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட செயலாளர் குமரகுரு […]
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 5 நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தான் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். கடந்த 2009ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரானார். அந்த சமயத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்நது […]
நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த வருட இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான “வாக்குபதிவு நாள்” குறித்து அறிவிப்புகளை வெளியிட்டது. நவம்பர் 7ஆம் தேதி முதல் தேர்தல் ஆரம்பித்து 5 மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஐந்து மாநில தேர்தல் வர உள்ளதால் காங்கிரஸ், பாஜக மற்றும் மாநில கட்சிகள் வெகு தீவிரமாக தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து உள்ளனர். இதில் […]
507-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]