செய்திகள்

அரியலூர் வெடி விபத்து – நிதியுதவி அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.  இதில் தீ காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, நிதியுதவி […]

#Fireaccident 5 Min Read
MKstalin

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.! தனி தீர்மானத்தில் முதல்வர் கூறிய முக்கிய குறிப்புகள்…

இன்று சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த ஜூன் நிலவரப்படி மேட்டூர் அணையில் 69.7 டிஎம்சி தண்ணீர் இருக்கும் போதே குருவை சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்தோம். அதனால் நீர் கடைமடை வரை சென்றது. ஆனால் குருவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருந்த சமயத்தில் செயற்கையான நீர் நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது என குற்றம் சாட்டினார். இந்த […]

#CauveryIssue 10 Min Read
Tamilnadu CM MK Stalin

காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – வானதி சீனிவாசன்

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் சில வரிகளுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாங்கள் அளிக்கும் திருத்தங்களை சேர்த்தால் தீர்மானத்தை ஆதரிப்போம் என தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தனித்தீர்மானம், முழுமையாக இல்லை எனக்கூறி சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.  அதன்பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், காவிரி நீர் பற்றிய தீர்மானம் முழுமையாக இல்லை. திமுக […]

#BJP 4 Min Read
vanathi sinivasan

சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஆந்திர உயர் நீதிமன்றம்!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, 3 வழக்குகளில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லு கலவர வழக்குகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன்மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், […]

#AndhraHighCourt 5 Min Read
TDP Leader N Chandrababu Naidu

அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்து.! பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு.!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.  இதில் தீ காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் 3 பேர் பெண்கள் எனவும் , ஒருவரது உடல் பாகங்கள் சிதறி கிடப்பதால், […]

#Ariyalur 3 Min Read
Ariyalur Fire Accident

சிக்கிமில் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு…100 பேர் மாயம்!

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலையில் திடீர் மேகவெடிப்பு காரணமாக பலத்த கனமழை பெய்தது. இதனால், தீஸ்தா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிக்கித் தவிக்கும் நிலையில், பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, […]

#Cloudburst 4 Min Read
Sikkim flood

5 மாநில தேர்தல்.! நவம்பர் 7 முதல் தேர்தல்.. டிசம்பர் 3இல் ரிசல்ட்.! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதற்கு முன்னதாக நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில்,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான […]

#Election2023 7 Min Read
stateelection2023

அரியலூர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..! உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைப்பு..!

தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை ராஜேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த ஆலையில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலை முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு […]

#Ariyalur 3 Min Read
death

5 மாநில தேர்தல்..! காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது..!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் கட்சி அனைத்து செயல்பாடுகளிலும் முழு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில்  கடந்த மாதம் 16-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து  இந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, காங். மூத்த தலைவர்கள் சோனியா […]

#5 state election 3 Min Read
Mallikarjun kharge

காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.! 

இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தனி தீர்மானம் தொடர்பாக உரையாற்றினார். அவர் கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், மேட்டூர் அணை சீராக திறக்கப்படுகிறது. கடந்த ஜூன் 12இல் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மே 24இல் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதை முன்னிட்டு காவிரி டெல்டா பகுதிகளில் […]

#CauveryIssue 4 Min Read
Tamilnadu CM MK Stalin speech about Cauvery Issue

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதலில் 260 பேர் பலி!

இஸ்ரேலின் காசா நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த மோதலில் இரு பிரிவினரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. தொடர் தாக்குதலால் காசா நகரம் முழுவதும்  பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், காசாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றை குறிவைத்து ஹமாஸ் குழுவினர், கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் காசா […]

#OperationIronSword 4 Min Read
music festival

தெர்மாகோல் போட்டு மூடி வச்சிருக்கோம் கவலை படாதீங்க..! செல்லூர் ராஜுவை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். கடந்த அம்மாவின் ஆட்சியில், எங்கள் மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.1,296 கோடியில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. அந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது, தற்போது மதுரையில் சாக்கடை நீர், குடிநீருடன் கலந்து வருகிறது. எனவே மக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான […]

#Duraimurugan 3 Min Read
Tamilnadu Minister Duraimurugan

அரியலூர் நாட்டுப்பட்டாசு ஆலையில் தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு.!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ராஜேந்திரன் என்பவர் அதனை நிர்வகித்து வருகிறார். தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருக்கும் போது காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலை முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக காவல்துறை மற்றும் […]

#Ariyalur 4 Min Read
Ariyalur Fire Factory Accident

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புதிய நூலகப் பிரிவு தொடக்கம்..!

மதுரையில் கலைஞர் கூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 206 கோடி ரூபாய் செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவு வாயிலில் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூலை 15-ஆம் தேதி திறந்து வைத்தார். நூலகத்தின் கீழ் தலத்தில் குழந்தைகளுக்கு என […]

#Kalaignar Centenary Library 4 Min Read
Kalaignar Library

3வது நாளாக தொடரும் தாக்குதல்: யாருடைய உதவியும் தேவையில்லை – இஸ்ரேல் அறிவிப்பு!

பிற நாடுகளின் ராணுவம் உதவிகள் எங்களுக்கு தேவையில்லை, இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் என இஸ்ரேல் தூதர் அறிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடர்ந்து மூன்றாம் நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பகல்-இரவு என்று பார்க்காமல் இரு தரப்பினரும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தினர், காசா நகரை குறி வைத்து தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர தாக்குதலில் இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா […]

#OperationIronSword 4 Min Read
Ambassador of Israel

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – ஓபிஎஸ் இருக்கையில் மாற்றமில்லை!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து, மறைந்த முக்கிய பிரமுகர்கள் பிரகாஷ் சிங் பாதல், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனிடையே, சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் […]

#AIADMK 5 Min Read
OPanneerselvam

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு.. சாதி பிரச்சனை இல்லை.! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.! 

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு, பின்னர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தற்போதுள்ள திமுக ஆட்சி காலத்தில் சட்டம் உறுதி செய்யப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றம் இந்த சட்டமசோதாவை நிறைவேற்ற உத்தரவிட்டது. தற்போது வரை வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. அதனால் […]

#AnbumaniRamadoss 10 Min Read
Anbumani Ramadoss

5 மாநில தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியை சேர்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு கூட்டங்களை நடத்தி வியூகங்களை வகுத்து வருகிறது. இதுபோன்று, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்த பேச்சுவார்த்தையை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் […]

#Election2023 6 Min Read
election2023

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது..! சபாநாயகரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும்,  தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று, இன்று கூடும் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]

#ADMK 3 Min Read
appavu

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி..! மருத்துவமனையில் அனுமதி..!

கடந்த ஜூன் 13-ஆம் தேதி நள்ளிரவில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அங்கு அவருக்கு  பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் சர்ஜரி […]

#DMK 3 Min Read
SenthilB Case j