இன்று முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஐ கடந்து அதிகரித்துள்ள நிலையில்,115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து,ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.
தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு,தீவிரமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க மத்தியக் குழு 10 மாநிலங்களுக்கு செல்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.குறிப்பாக,தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:
“கொரோனா அபாயம் மற்றும் அபாயமில்லாத அனைத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் வீடுகளில் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.எட்டாவது நாள் கொரோனா இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் வெளியில் வர வேண்டும்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும்.ஆனால்,நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.வெளிமாநிலங்களுக்கு சென்றும் புத்தாண்டு கொண்டாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும்,தமிழகத்தில் ஒமிக்ரான் பாதித்த 34 பேரில் 12 பேர் குணமடைந்துள்ளனர்.எனினும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.அவர்களின் மாதிரிகள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.5 நாட்களில் பரிசோதனை முடிவு தெரிய வரும்.
மேலும்,ஞாயிற்றுக்கிழமை (இன்று) 16 வது கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது.இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே,இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த…