12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர்ராதாகிருஷ்ணன்போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறை செயலாளராகபீலா ராஜேஷ்ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர்கார்த்திகேயன்நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பத்திரப்பதிவுஐ.ஜியாக இருந்தகுமரகுருபரன்பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர்ஹரிஹரன்நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராகஎஸ்.சிவராசுவைநியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கணேஷ், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை முதன்மை செயலாளர்பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர்உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக ஆணையர்பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சிகே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர்ஆனந்த்,திருவாரூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சுகாதாரம், குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குநர்நாகராஜன், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.