உதயமானது புதிதாக 2 மாநகராட்சிகள்!!தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகள்!!

ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனவரி 5 ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றது.

இதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை முழுக்கமுழுக்க கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகுறித்த விஷயங்களையே பேசினேன்.திருவாரூர் தேர்தல் குறித்து பாஜகமாநில தலைவர்தான் முடிவு செய்யவேண்டும் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

unknown node

இந்நிலையில் தமிழக பட்ஜெட்டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை நேற்று  காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்று மூன்றாவது நாள்  விவாதம் நடைபெறுகிறது.

ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய  மாநகராட்சிகளை மாற்ற அரசு திட்டமிட்டது.

unknown node

ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.இதை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

இந்நிலையில்  ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய  மாநகராட்சி சேர்க்கப்பட்ட நிலையில் மொத்தம் தமிழகத்தில் 14 மாநகராட்சிகள் உள்ளது.