#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-20 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,509 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,509 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,16,381 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 177 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,719 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,64,820 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,54,718 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,24,72,641 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 16,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025