நாளை முதல் ஜனவரி 13 வரை 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு

The Tamil Nadu government has announced that special Pongal buses will run from tomorrow to Jan. 13 as planned.

திட்டமிட்டப்படி நாளை முதல் ஜன.13-ம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.