#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-34 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,933 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,84,969 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 211 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,462 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,887 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,30,096 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,59,564 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,94,85,640 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 20,411 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025