பிரியா உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஆனால், அந்த முன் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகியோர் தற்போது தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.