சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி..!

Thirupathur Bus Accident

சென்னை அண்ணா நகரில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் நடந்த கார் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏரோநாட்டிகல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ஆசிப்.

இவர், அதிகாலை 2.30 மணியளவில் ஆசிப் தனது நண்பர் ரமணா மற்றும் ஒரு பெண் தோழியுடன் மது, கஞ்சா அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், ஆசிப் ஓட்டி வந்த கார் சாலையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து..! 4 பேர் உயிரிழப்பு..!

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சூப்பர் மார்க்கெட் காவலாளி நாகசுந்தரம், கலோரி 2-ஆம் ஆண்டு மாணவர் விஜய் யாதவ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் ஆசிப் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் உடன் இருந்த அவரது பெண் தோழி ரமணா அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆசிப் என்பவர் கஞ்சா போதையில் இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்