ஒரே நேரத்தில் 33 அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

AIADMK: அதிமுக வேட்பாளர்கள் நாளை ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

Featured image

AIADMK: அதிமுக வேட்பாளர்கள் நாளை ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 27ஆம் தேதி கடைசி நாளாகும்.

Read More –சூர்யவம்சம் படம் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்: சரத்குமார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படவுள்ளது.

Read More –மீண்டும் எய்ம்ஸ் செங்கலை கையில் எடுத்த அமைச்சர் உதயநிதி

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாலர்கள் அனைவரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். அதன்படி தேர்தலில் போட்டியிடும் 33 தொகுதி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.