லஞ்ச ஒழிப்பு சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது!

During the last 75 days, anti-corruption officials seized 7.2 kg of gold, 9.8 kg of silver and 10.52 carat diamonds.

கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டதில், 7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், திடீரென நடத்தப்பட்ட சோதனையில், ரூ.6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையில், மொத்தம் 7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.