வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 5 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.
unknown nodeதிருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.அக்டோபர் 25 ஆம் தேதி வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்நிலையில் வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. வைகுண்டராஜனின் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் 5 நாட்களாக வருமானவரி சோதனை நடைபெற்றது.
இதில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் 30 வங்கிக்கணக்குகள், 24 வங்கி லாக்கர்கள் முடக்கம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது .