நாளை ராம்நாத் கோவிந்த் வருகையை ஒட்டி  5 அடுக்கு பாதுகாப்பு...!

A five-tier security has been set up for the visit of President Ramnath Govind to Chennai tomorrow.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகையை ஒட்டி  5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டமன்ற மண்டபம் ஆகிய இடங்களில், காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், போக்குவரத்து காவல், கமாண்டோ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட 5,000 காவல் துறையினருடன் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.