சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ....!  அமைச்சர் கடம்பூர் ராஜூ

சிறப்பு காட்சி ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சிறப்பு காட்சி ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜூ  கூறுகையில், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, சிறப்பு காட்சி ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை  எடுக்கப்படும். அனுமதியின்றி சிறப்பு காட்சிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது, வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.