அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை நடத்தது.அதில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கின.சோதனையின் போது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது..
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து வெளியான தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரி சோதனை தொடர்பாக தங்கள் குடும்பத்தின் அரசியல் எதிரிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார். ஊடகங்களில் வருவது போன்று தங்கள் குடும்பத்தினர் வருமானத்துறையினரிடம் எந்தவித வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் , ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் கூறியுள்ள சின்னத்தம்பி, தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருவது மிகுந்த மன உளைச்சலையும், மன வேதனையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் வருமானத்துறையினரின் விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், அரசியல் ரீதியிலான சூழ்ச்சிகளை அரசியல் ரீதியில் எதிர்கொள்வோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்….
DINASUVADU