பெங்களூரில் தனது அண்ணனை சந்தித்து ஆசி பெற்ற நடிகர் ரஜினிகாந்த்.!

Actor Rajinikanth has been blessed to meet his brother Satyanarayana in Bangalore on the eve of starting a political party.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை ஒட்டி பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து கடந்த 30-ம் தேதி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தனது அண்ணன் சத்யநாராயணாவை பெங்களூரில் சென்று சந்தித்து ஆசி வாங்கியுள்ளார்.மேலும் அவர் பெங்களூரில் உள்ள அண்ணன் வீட்டிலையே டிசம்பர் 14-ம் தேதி வரை தங்கி  புதுக்கட்சி தொடர்பான முடிவுகளையும் ,சில பிரமுகர்கள் மற்றும் நண்பர்களை இது தொடர்பாக சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் அவர் தனது பிறந்தநாளை  அண்ணனுடன் கொண்டாடி விட்டு நவம்பர் 15-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.