நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கைது!
நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பலரிடம் பணம் மோசடி செய்து இருந்ததாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதன்பிறகு சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும், தன் மீது அவதூறு வரப்போவதாகவும் சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்து இருந்தார்.
நடிகையும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு!
இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மாறி மாறி புகார் அளித்துக்கொண்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்த இந்த வழக்கு நீதிமன்ற உத்தரவு படி திருமங்கலம் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக இன்று விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
இன்று காலை 9.30 மணி முதல் சென்னை அண்ணா நகர் திருமங்கலம் வெல்கம் காலனி பகுதியில் இருக்கும் நடிகை ஜெயலட்சுமி வீட்டில் நீதிமன்ற அனுமதி உடன் திருமங்கலம் காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நடிகை ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.