கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டால் அவர் இருக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அவர் சந்தித்த நபர்களையும் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நாமக்கல், மோகனூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாமக்கல் அதிமுக M.L.A கே.பி.பி.பாஸ்கர் கலந்துகொண்டார். அந்த விழாவில் கலந்துகொண்ட இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட M.L.A கே.பி.பி.பாஸ்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.