பாமகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது-திருமாவளவன்

நேற்று  கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியும் சென்றனர்.அங்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில்  பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சு நடைபெற்றது.

அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

.பாமகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்று  கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியும் சென்றனர்.அங்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர்  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளித்தது.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  அதிமுக-பாஜக-பாமக கூட்டணி, திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே அதிமுக-பாமக கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது .பாமகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.