திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள்? அமமுக – திமுக இடையேயான உறவு வெளிப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

அமமுக - திமுக இடையேயான உறவு வெளிப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமமுக – திமுக இடையேயான உறவு வெளிப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.பின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்தார்.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கட்சியை மீறி செயல்பட்டதால் 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எங்கள் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால், திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .மேலும் இதன் மூலம் அமமுக – திமுக இடையேயான உறவு வெளிப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.