தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Alliance with DMDK will soon be confirmed - Tamil Nadu BJP leader themuthikavudan kootani viraivil uruthi seiyappadum

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும்.தமிழகத்தில் 40 தொகுதிகளில் வெல்வதே முக்கியம். நாடு முழுவதும் தாமரையை மலரவைப்பதும் முக்கியம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.