நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா-தமிழிசை சவுந்தரராஜன்

Amit Shah is a successful successor

நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.

unknown node

இந்நிலையில் தூத்துக்குடி சங்கரப்பேரியில் அதிமுக-பாஜக கூட்டணி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.இந்த பரப்புரையில்  தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளரும்,தமிழக பாஜக தலைவருமான தமிழிசை பேசினார்.அவர் பேசுகையில், நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா.தற்போது பறந்து வந்துள்ளார், வெற்றி நிச்சயம் என்று  தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.