“திமுகவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கும்!”- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திமுகவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
உலக மனநிலை தினத்தை முன்னிட்டு, மதுரையில் செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் HCL நிறுவனம் சார்பாக கொரோனா பரவலால் மனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநகராட்சியோடு இணைந்து மக்களிடம் பேச தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டது.
அந்த தொலைபேசி எண்களை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 2016 ஆம் நடந்த சட்டமன்ற தேர்தலை போலவே 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிச்சியமாக வெற்றிபெறும் என கூறினார். திமுகவில் ஆரோக்கியமான அரசியல் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கருத்து பரிமாற்றம் இல்லை எனவும், அங்கு பூகம்பம் வெடிப்பதற்கு நேரம் வந்துவிட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் அந்த பூகம்பம் வெடிக்கும் என தெரிவித்தார்.
இந்த விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025