தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு மொபைல் இலவசம் – அதிரடி சலுகையை அறிவித்த ஆட்சியர்!

Android phone is free if you pay for the vaccine at the mega vaccination camp to be held tomorrow in Tiruvallur district.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் இலவசம்.

திருவள்ளூர் நகராட்சியில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10000 மதிப்பிலான ஆண்ட்ராய்டு மொபைல் மூன்று பேருக்கு வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது.

இதனிடையே, மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @TiruvallurCollr-ஐ டேக் செய்ய வேண்டும் என்றும் மீம்ஸ்களை பதிவிட வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 25ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டது.

unknown node