ஆந்திர முதல்வர் பதவி ஏற்பு விழா : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.அதன்படி வருகின்ற 30 ஆம் தேதி முதலமைச்சராக பதிவு ஏற்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

இந்நிலையில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதனையடுத்து ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.