சர்கார் படத்தை பொறுத்தவரை நல்ல கருத்துகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், சர்கார் படத்தை பொறுத்தவரை நல்ல கருத்துகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை மூலமாகவோ சட்டரீதியாகவோ தீர்க்க வேண்டும். கூட்டணி பற்றி அனைத்து கட்சிகளும் அறிவிக்கும்போது நாங்களும் முறையாக, சரியாக அறிவிப்போம் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.